நான்
ஜெயித்த புத்ர ஜயா!
பேசும்
பொம்மைக் கலைஞர் ஷாந்தகுமார்
(94441
48832)
14.8.2017:
போன
வருடம் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி மலேசியா வந்த பொழுது புத்ர ஜயா எனும்
இடத்துக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
காரணம் அது விமான நிலையத்துக்கு அருகில் இருந்ததால், அப்படியே அவர்களை விமான
நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழியனுப்ப வசதியாக இருந்தது. நான் மலேசியாவில் இன்னும் சில நாட்கள் தங்க
முடிவு செய்திருந்ததால், என்னால் அவர்களோடு செல்ல முடியவில்லை. இது என் முதல் தோல்வி.
இந்த
வருடம் ஆகஸ்டு 11-ஆம் தேதி மீண்டும் மலேசியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சரி… இம்முறை எப்படியாவது அங்கு சென்று விட
வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு மீண்டும் மண் விழுந்து விட்டது. ஆம்!
எங்களோடு வந்த ஒரு நண்பர் இந்த வருடமும் தன்னுடைய கடவுச் சீட்டை (அதாங்க
பாஸ் போர்ட்) தொலைத்து விட்டார். போன
வருடம் வேறோருவர் தவறவிட்டார். கள்ளச்
சந்தையில் அதனுடைய விலை ரூ. ஐந்து லட்சம் வரை போவதாக அங்குள்ள நண்பர் போன வருடம்
கூறியிருந்தார்.
அதனால்
எங்கள் மலேசியத் தலைவர் அந்த நண்பரோடு அலைய வேண்டியிருந்ததால், எங்கள் பயணம்
தடைபட்டது. நேரம் கடந்ததால், அங்கு
வந்திருந்த நம் குழுவினர், “வண்டியை நேராக விமான நிலையத்துக்கு ஓட்டு!” என்று கூற
ஆரம்பித்துவிட்டனர்.
அனைத்தும்
இறைவன் செயல் என்றெண்ணிய நான், ஒரு வாடகைக் காரைப் பிடித்து நான் தங்க நினைத்த
‘லோட்டஸ்’ எனும் விடுதிக்கு விரைய வேண்டியதாயிற்று. இது எனது இரண்டாவது தோல்வி.
21.8.2017:
15-ஆம்
தேதி தாய்லாந்து போய்விட்டு 19-ஆம் தேதி மீண்டும் மலேசியாவுக்குத் திரும்பிய நான்,
தனியாகவே புத்ர ஜயாவுக்கு செல்லத் தீர்மானித்தேன்.
திரு.
கிரிஷண மணியத்தோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அவர் மெட்ரோ மற்றும் L-15 எனும் பேருந்து
வண்டியைப் பிடித்து எப்படி செல்ல வேண்டும் என்று விளக்கினார்.
போன
வருடம் அவர் அங்கேயே வேலை செய்து வந்ததால், எங்கள் குழு அனைவரையும் பிரதம
மந்திரியின் அலுவலகத்துக்குள்ளேயே அழைத்துச் சென்றார். வேறெந்த சாதாரண நபருக்கும் கிடைக்காத பாக்கியம்
அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் தற்போது,
அவர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் வேலை செய்வதால், உள்ளே செல்ல இயலாது என்று கை விரித்து
விட்டார்.
சரி…
புத்ர ஜயா என்றால் என்ன? அங்கு அப்படி
என்னதான் இருக்கிறது? பெயரை வைத்து, அது
ஏதோ புத்தர்களின் கோயில் என்று எண்ணிவிட வேண்டாம். மேலே படியுங்கள்!
புத்ர
ஜயா என்ற இடம் மலேசிய அரசால் உருவாக்கப்பட்ட புதிய நகரம். அவ்விடத்திற்கு படிப்படியாக அரசு அலுவலகங்கள்
அனைத்தும் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே அரசின் திட்டம். காரணம் கோலாலம்பூரில் உள்ள ஜன நெருக்கடியையும்,
கட்டட நெருக்கத்தையும் குறைக்கவே இத்திட்டம் உருவாகி, 1999-இல்
செயலாக்கப்பட்டது. இத்திட்டத்தை பழையப்
பிரதமர், திரு. மஹாதிர் மொஹமது அவர்கள் உருவாக்கினார். இது 25 கிலோமீட்டர் தூரத்தில் கோலாலம்பூருக்கு
தெற்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
(நமது
தமிழ் நாட்டில்கூட அம்மா இப்படி ஒரு திட்டத்தைக் கூறினார். அதாவது கோட்டைக்குள் இயங்கி வரும் அரசு அலுவலகங்களை
சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் ஈ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளுக்கு
நடுவில் உள்ள இடத்துக்கு மாற்ற திட்டமிட்டார்.
ஆனால் என்ன காரணமோ, அது நிறைவேறவில்லை.)
அத்திட்டத்தின்படியே
வெளி நாட்டு தூதரகங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களும் அங்கு நகர்ந்தன.
இப்புதிய
நகரத்தில் 38 சதவீத நிலம் பசுமையான தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது. 8.1 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 51,852
கோடி ரூபாய் செலவிடப்பட்டு இந்நகரம் கட்டமைக்கப்பட்டது. வெளி நாட்டிலிருந்து 10 சதவீதப் பொருட்களே
வரவழைக்கப்பட்டன. மீதி அனைத்தும் உள்ளூர்
பொருட்களையே பயன்படுத்தினர்.
அங்கு
கட்டப்பட்டுள்ள பிரதம மந்திரி அலுவலகத்துக்கு 300 அரசு அலுவலகர்கள் 1999-இலேயே
சென்றுவிட்டனர். மீதி நபர்கள் 2005-இல்
நகர்ந்தனர். இவர்களுக்கு கடனும், மானியமும்
வழங்கப்பட்டன.
மெட்ரோ
ரயில் 2002-இல் புத்ர ஜயாவை விமான நிலையத்தோடு இணைக்கப்பட்டது. அதாவது கே.எல். சென்ட்ரலில் இருந்து புறப்படும்
ரயில் இங்கு நின்ற பிறகே விமான நிலையத்தை அடைகிறது. இங்கு திட்டமிடப்பட்ட மோனோ ரயில் அதிக நிதி
தேவைப்பட்டதால் கை கழுவப்பட்டது.
புத்ர ஜயா வழியாக செல்லும் அழகிய மெட்ரோ
அலுவலர்கள்
இங்கு தங்க வீடுகளும், பொருட்கள் வாங்க ஏதுவாக கடைகளும் கட்டப்பட்டன. இங்கு மாற்றம் செய்யப்படாத அலுவலகங்கள்:
வெளிநாட்டு வியாபாரம், பாதுகாப்புத் துறை, மற்றும் பொதுத் துறை.
இங்குள்ள
கட்டடங்களாவன:
பெர்தான
புத்ரா (பிரதம மந்திரி அலுவலகம்), செரி புத்ரா (அவருடைய வீடு), நீதி வழங்கும் அரண்மனை, நிதி இலாக்கா, விஸ்ம புத்ரா (வெளியுறவு), மெலாவதி அரண்மனை, சர்வதேச மாநாட்டு
மையம், பெர்தானா தலைவர்களை உருவாக்கும் மையம், மரபுரிமை சதுக்கம், செலெரா புத்ரா,
புத்ரா பள்ளிவாசல், இரும்புப் பள்ளிவாசல் முதலியன.
பள்ளி வாசல், பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் ஏரி...
நீதி வழங்கும் அரண்மனை
புத்ர ஜயா சர்வதேச மாநாட்டு மையம்
புத்ர ஜயாவை மேலிருந்துப் பார்த்தால்...
மேலும்
பொற்கால நினைவுச் சின்னம், நாட்டு வீரர்களின் சதுக்கம், புத்ர ஜயா ஏரி, ஒரு அழகிய பாலம், புத்ர
சதுக்கம், 92 ஹெக்டேரில் அமைந்த புத்ர ஜயா தாவிரவியல் தோட்டம் முதலியனவும்
இங்குள்ளன.
அழகிய பாலம்
இங்குள்ள
புத்ர ஜயாவின் ஏரி மனிதனால் உண்டாக்கப்பட்ட செயற்கையான ஏரி. 650 ஹெக்டேரின் அமைந்துள்ளது. இது நகரத்தைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும் போக்குவரத்து, நீர் விளையாட்டு, மீன் பிடித்தல்
போன்றவற்றுக்கும் பயன்படுகிறது. படகுப்
போட்டிக்கும், நீச்சல் போட்டிக்கும் ஏற்ற இடம் இந்த ஏரியே.
என் அனுபவங்கள்:
ரயிலிலிருந்து
இறங்கி L-15 பேருந்து மூலம் புத்ர ஜயாவின் முக்கியமான இடத்துக்கு சென்றேன். அங்கு அருகருகே, பிரதம மந்திரியின் அலுவலகம்,
புத்ர ஜயா சதுக்கம், ஏரி, மற்றும் புத்ர ஜயா பள்ளி வாசல் அமைந்துள்ளன. அவை நான்குமே அழகாகவும், பிரமாண்டமாகவும் அமைந்திருக்கின்றன.
எனவே
சுற்றி, சுற்றி பல புகைப்படங்கள் ‘க்ளிக்’ செய்தேன். ஒரு காணொலியும் (வீடியோ) எடுத்தேன்.
காணொலி இதோ:
புகைப்படங்கள் இதோ:
காணொலி இதோ:
புகைப்படங்கள் இதோ:
ஏரிக்கும், பள்ளி வாசலுக்கும் நடுவில் இரண்டு தமிழ் வாலிபர்கள் ஆறு கலர் பறவைகளை நம்மீது அமர வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொடுக்கின்றனர். நான்கு படங்கள் எடுத்து, அதில் எது பிடிக்கிறதோ அதனை உடனே அச்செடுத்து கொடுத்து ரூ.300 கரந்து விடுகின்றனர்.
பிறகு
என்னிடம் அவர்கள் தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி ஆவலுடன் பேசினார்கள். கமல ஹாசனோ, ரஜினியோ முதலமைச்சராக வந்தால் நாடு
எப்படி இருக்கும்? என்று கேட்டார்கள்.
என் நண்பர், திரு. வெற்றி
விடியல் சீனுவாசன் அவர்கள், அந்த அழகிய பறவைகளுடன் மாயக் குரலில் பேசினீர்களா
என்று முகநூலில் கேட்டிருந்தார்.
நான் அளித்த பதில்:
புகைப்படம் எடுக்கும்போது
பயப்படாமல் இயற்கையாக இருக்கும்படி நடித்தது என்னவோ வாஸ்தவம்தான்! காரணம்
தோள்பட்டையில் அமர்ந்திருந்த கலர்ப்பறவை என் தலையின் மீது தன் அலகால் வருடிக்
கொண்டே இருந்தது. கை மீது அமர்ந்திருந்த ஒரு குட்டிப் பறவை லேசாக கொத்திக் கொண்டே
இருந்தது. இம்மாதிரி சந்தர்ப்பத்தில் அதனோடு பேச வேண்டும் என்ற எண்ணம் எழவேயில்லை!
பிறகு
அங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள பொற்கால நினைவுச் சின்னத்திற்கு பேருந்து மூலம்
சென்றேன். அதற்குள்ளே ஒன்றுமில்லை என்று
சொன்னவுடன் வருத்தப்பட்டேன்.
அந்த
நினைவுச் சின்னம் 68 மீட்டர் உயரம். இரவு
நேரத்தில் அதிலிருந்து வெளிப்படும் ஒளி 360 டிகிரியில் புத்ர ஜயாவில் எல்லா
இடங்களுக்கும் பிரகாசிக்குமாம்! மேலும்
அவ்வொளி படகு ஓட்டுபவர்களுக்கு வழி காண்பிக்குமாம்.
அதற்கு
முன்னால் பறக்கும் பலூன் இருந்தது. அது
சற்று உயரத்துக்கு மட்டுமே பறக்குமாம். 15
நிமிடத்தில் திரும்பி விடுமாம். அதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.750.
(இது
பற்றி, என் நண்பர், திரு. நந்தனுக்காக ஏற்கனவே சென்னையில் விசாரித்தேன். இப்பலூனில் இரு வகை. முதல் வகை, கயிறு கட்டப்பட்டிருக்கும். மேலே பறக்கும். சிறிது நேரத்தில், அக்கயிற்றின் உதவியோடு கீழே
இறக்கிவிடலாம்.
(இரண்டாவது
வகை, பறக்க விட்டால் எங்கு செல்லும் என்றே சொல்ல முடியாது. காற்றுக்கேற்றவாறு சுமார் 20 கிலோமீட்டர் வரை
பறந்து செல்லும். பிறகு அங்குள்ள சமமான
இடத்தில் இறக்கிவிட்டு, பலூனை லாரியில் எடுத்து வந்து விடுவர். இதற்கு காவல் துறையில் அனுமதி வாங்க வேண்டும். இரண்டாவது வகை பலூனுக்கு அதிக வாடகை கொடுக்க
வேண்டும்.)
உள்ளே
கதவுக்கப்பால் 20 பள்ளிக் கூடம் செல்லும் பெண் பிள்ளைகள் அமர்ந்திருந்தனர். உள்ளே ஒரு உணவு விடுதியும் இருந்தது. ஆனால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
நுழைவுக்
கட்டணம் கட்ட முயற்சித்தால், அன்றைய பறக்கும் நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று
கூறிவிட்டனர். சிறிது நேரம் கழித்து, அருகிலிருந்த
தோட்டத்தில் அமர்ந்து நான் எடுத்து வந்த பிஸ்கெட்டை உண்ணும்பொழுது, அந்த பலூன் உயரே
பறப்பதைப் பார்த்தேன்.
ஒரு
வேளை, அன்றைக்கு மீதமுள்ள நேரத்தில் பறக்கும் அளவுக்கு ஏற்கனவே ஆட்கள் வந்து
விட்டதால் எனக்கு நுழைவுச் சீட்டு கொடுக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன். ஆனால் அங்கிருந்த மாது அதைச்
சொல்லியிருந்திருக்கலாம்.
ரயிலில்
திரும்பும்போது என்னிடமிருந்து ஒரு வெற்றிப் புன்னகை உதிர்ந்தது. ஆம்!
இம்மூன்றாவது முறை புத்ர ஜயா பார்ப்பதில் வெற்றி பெற்று விட்டேன். நான் ஜெயித்த புத்ர ஜயாவை என்னால் மறக்க
முடியாது!
--ooOoo--
P R O F I L E
Name : G.A. Santhakumar
Act : Ventriloquist cum Magician cum Puppeteer
Experience : 20 years
Languages used : Tamil, English and little Hindi
Qualifications : M.A., B.L., CAIIB
Performed : More than 8,000 shows, including performances in U.A.E.-10
Schools, Seychelles-Tamil Mandram, Kuwait-Tamil Engineers
Forum, Malaysia-Writers’ Conference and Singapore-Church.
Timings : Usually I do Ventriloquism with four props, viz. Boy, White
Talking Board, Mask and Girl & Monkey for 40 minutes
+ magic for 20 minutes
Performed in : In all the TV channels except Animal Channel.
Ex: Sun TV, Vijay, Jaya, Pothigai, Raj, Makkal and Chutti
Workshops : IIT (Chennai twice), Bits Pilani (Goa) & NIT (Trichy twice)
Important clients : Microsoft, Infosys, Wipro, TCS, Isoft, Mphasis, Oracle, First
Source, Accenture, Visteon, Mind Tree, Tuticorin Sterlite,
MRF, Apolo Tyres, L&T, Dalmia Cements, Delhi Tamil
Sangam, Anna University, MMC, Sathyabama University,
Arunai Eng. College, World Bank, RBI, SBI, Citi, Bank of
America, Indian Bank, Standchart, IDBI, NABARD, Canara,
Sriharikotta Space Centre, GAIL, BHEL, BP, Kalpakkam
Atomic Centre & Coast Guard @ ship!
Additions : I can do skits and dance through stage puppets show
I also perform dance through stringed puppets
I conduct workshop to teach ventriloquism
Articles published : English: The Hindu, Indian Express, Ergo & Deccan Chronicle
Tamil: Vikatan, Dinamani Kathir, Dinamalar, Amudhasurabi
& Ladies Special; Telugu: Eenaadu
Quotes from them : “Humor is the choice through his voice” (Hindu)
Banker by profession & ventriloquist by passion!
Other activities : Worked in a nationalized Bank for 35 years;
Wrote 29 books (26 in English & 3 in Tamil)
Trainer on HR and Banking topics in Engineering Colleges
CONTENTS & VIDEO LINKS
Contents :
· Clean jokes, songs and comedy quiz
· Perform the show to suit the audience
· Stressing the importance of positive thinking.
· Can add any topic on HR or social issues, like
Environment, ban on plastic, smoking and drinking.
· My favorite subject:
How to convert adversities into opportunities?
Doll talking show is a unique one! And humor is the best medicine!
Some call him a Doctor because he heals many people through humour therapy!
I request you to go through my website and other blogs:
www.besteventschennai.com (As Ventriloquist and Event Manager)
MY BLOGS
http://ventshanthakumar.blogspot.com/ (My interview as Ventriloquist)
http://saarang2010.blogspot.com/2010_02_01_archive.html (Photos of my workshop in Saarang 2010 at IIT, Chennai)
http://shanthakumarszenstories.blogspot.in/ (On Zen stories)
http://myholytour.blogspot.in/ (About our tour to Holy Land)
http://adversitiesintoopportunities.blogspot.in/ (On self development, A must read)
http://feelhappyever.blogspot.in/ (Tips to get happiness everyday)
http://dollshanthakumar.blogspot.in/ (My humorous experiences as Ventriloquist)
http://hypnosisforselfdevelopment.blogspot.in/ (Self Hypnosis for self development)
http://tipsforias.blogspot.in/ (Tips to score higher marks in IAS examination)















Comments
Post a Comment