நான் ஜெயித்த புத்ர ஜயா! பேசும் பொம்மைக் கலைஞர் ஷாந்தகுமார் (94441 48832) 14.8.2017: போன வருடம் பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி மலேசியா வந்த பொழுது புத்ர ஜயா எனும் இடத்துக்கு அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். காரணம் அது விமான நிலையத்துக்கு அருகில் இருந்ததால், அப்படியே அவர்களை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழியனுப்ப வசதியாக இருந்தது. நான் மலேசியாவில் இன்னும் சில நாட்கள் தங்க முடிவு செய்திருந்ததால், என்னால் அவர்களோடு செல்ல முடியவில்லை. இது என் முதல் தோல்வி. இந்த வருடம் ஆகஸ்டு 11-ஆம் தேதி மீண்டும் மலேசியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சரி… இம்முறை எப்படியாவது அங்கு சென்று விட வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு மீண்டும் மண் விழுந்து விட்டது. ஆம்! எங்களோடு வந்த ஒரு நண்பர் இந்த வருடமும் தன்னுடைய கடவுச் சீட்டை (அதாங்க பாஸ் போர்ட்) தொலைத்து விட்டார். போன வருடம் வேறோருவர் தவறவிட்டார். கள்ளச் சந்தையில் அதனுடைய விலை ரூ. ஐந்து லட்சம் வரை போவதாக அங்குள்ள நண்பர் போன வருடம் கூறியிருந்தார். அதனால் எங்கள் மலேசியத் தலைவர் அந்த நண்...